கனேடிய பூங்காக்கள் பிரிவு ரூஜ் தேசிய நகர பூங்காவிலுள்ள (Rough National Urban Park) வன விலங்குகளையும் தாவர இனங்களையும் பாதுகாக்கின்றது. ரூஜ் பூங்காவிலுள்ள சகல விலங்குகளும் தாவரங்களும் பாதுகாக்கப்படுகின்றன. அந்த விலங்குகளையும் தாவரங்களையும் வெளியால் எடுத்துச்செல்வது சட்டப்படியான குற்றமாகும். ஒன்டாரியோ மாகாண அல்லது பூங்கா மேற்பார்வை அதிகாரி வழங்கிய விஷேட அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் மாத்திரம் பூங்காவிலுள்ள ஏதாவது விலங்கை அல்லது தாவரத்தை வெளியால் எடுத்துச்செல்லலாம்.

ரூஜ் தேசிய நகர பூங்காவில் பயன்படுத்துவதற்காக ஒன்டாரியோ இயற்கை வளங்கள் மற்றும் வனங்கள் பற்றிய அமைச்சு அல்லது கனேடிய பூங்காக்கள் பிரிவு வழங்க வேண்டிய விஞ்ஞான ரீதியான ஒரு அனுமதிப்பத்திரம் இன்றி, எந்தவொரு இலக்கிற்காகவோ அல்லது எந்தவொரு நோக்கத்திற்காகவோ க்ரேபிஸை (Crayfish) எடுத்துச்செல்வது சட்டவிரோதமானது. செல்லுபடியான ஒன்டாரியோ மீன்பிடி அனுமதிப்பத்திரம் ஒன்றை வைத்திருப்பவர்கள் எந்த நீர் நிலையில் அவர்கள் மீன்களை பிடிக்கின்றார்களோ அதில் மட்டும் க்ரேபிஸை மீன் இரையாக பயன்படுத்தலாம். அவற்றை பிடித்த பின்னர் முதலில் வேறேதாவது இடத்திற்கு எடுத்துச்செல்லாமல் உடனே பயன்படுத்தப்படுமாயின் மாத்திரம் இந்த செயல் அனுமதிக்கப்படும். அவை எந்த நீர் நிலையிலிருந்து எடுக்கப்பட்டதோ அதே நீர் நிலையில் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

ஒன்டாரியோ மாகாணத்தில் அதிகளவில் ஆக்கிரமித்து வாழக்கூடிய ஒரு இனமான ரஸ்ட்டி க்ரேபிஸ் (Orconectes rusticus) பரவும் ஆபத்தை குறைப்பதற்காக இந்த விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ரஸ்ட்டி க்ரேபிஸ்கள் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஓஹியோ ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் மீனினமாகும். இந்த மீனினங்கள் 1960 ஆம் ஆண்டுகளில் ஒன்டாரியோ மாகாணத்தில் முதல் முதலாக பதிவாகியிருந்தன. ஒன்டாரியோ மாகாணத்தில் வாழும் க்ரேபிஸ்களுடன் ஒப்பிடும் போது, இந்த ரஸ்ட்டி க்ரேபிஸ்கள் அளவில் பெரியதாகவும், கொடூரமானவையாகவும், விரைவில் பெருகி உணவுக்காக பயன்படும் உள்நாட்டு க்ரேபிஸ்களை அழித்தொழித்து வாழக்கூடியனவாகவும் இருப்பதாலும் அவற்றின் கொடூரத்தன்மையினாலும் அவற்றை முன்கூட்டியே அழித்து அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது சிறந்ததாகும்.

கனேடிய பூங்காக்கள் பிரிவுக்கு சுற்றாடலை பாதுகாக்கும் பொறுப்பு இருப்பதால் ரூஜ் தேசிய நகர பூங்காவிலுள்ள ரஸ்ட்டி க்ரேபிஸ்கள் போன்ற ஆக்கிரமித்து வாழக்கூடிய மீனினங்களை தொடர்ச்சியாக சமாளித்து கட்டுப்படுத்தி வருகின்றது. எமது ஊழியர்கள் சூழவுள்ள ரஸ்ட்டி க்ரேபிஸ்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக பாடுபட்டு வருகின்றனர். ஆதலால் ஆக்கிரமித்து வாழக்கூடிய இந்த மீனினங்கள் பரவுவதை குறைப்பதற்கு நாம் உங்களின் உதவியை கோருகின்றோம். தயவுசெய்து பூங்கா ஒழுங்குவிதிகளை மதித்து பின்பற்றுங்கள். அவ்வாறு செய்வதால் ரூஜ் பூங்காவிலுள்ள இனிமையான செயற்பாடுகளை அனைவரும் அனுபவிக்கலாம். அது மட்டுமன்றி பூங்காவிலுள்ள வன விலங்குகளின் பாதுகாப்பும் அதனால் உறுதிப்படுத்தப்படும்.